×

சாலை பாதுகாப்பு கலந்துரையாடல்

வால்பாறை, ஜன.24: வால்பாறை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து வால்பாறை அரசு கல்லுாரியில் நடந்த கலந்துரையாடலில் காவலர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஆண்டுதோறும் ஜனவரி 2வது வாரத்தில் தொடங்கி 7 நாட்களுக்கு சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இது 31 வது சாலை பாதுகாப்பு வாரமாகும். அதன்படி நேற்று வால்பாறையில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கலந்துரையாடல் கல்லுாரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போலீசார் கூறுகையில், பொதுமக்களிடம், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அவசியம் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும். காரில் செல்பவர்களும், ஓட்டுபவர்களும் சீட் பெல்ட் கட்டாயம் அணிந்து பயணிக்க வேண்டும்.  அப்போதுதான் விபத்து ஏற்பட்டாலும் உயிர் சேதம் இல்லாமல் தப்பிக்க முடியும். வால்பாறை டவுனில் மாணவர்கள் நடைபாதையில் நடந்து செல்லவேண்டும், சாலைஓரத்தில் நடக்கவேண்டும், செல்போன் பேசியபடி சாலையில் நடக்க கூடாது என அறிவுரை வழங்கினர். மேலும் விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்