கோவையில் வாகன சோதனை கேரளாவை சேர்ந்த 2 பேர் சிக்கினர்

கோவை, ஜன. 24: கோவையில் நடந்த வாகன சோதனையில் கேரளாவை சேர்ந்த 2 பேர் சிக்கினார்கள். இவர்கள் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கோவை மேற்கு பகுதி குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவில் ஒப்பணக்கார வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த 2 பேரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 பேரும் கேரளாவில் நடைபெற்ற பல்வேறு திருட்டு வழக்குகளில் தேடப்படும் நபர்கள் என்பதும், அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு வடக்கஞ்செரி ஒட்டப்பராவை சேர்ந்த கிரண் (20), சிபு (40) என்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து கோவை போலீசார் உடனே கேரள போலீசாருக்கு தகவல் கொடுத்து 2 பேரையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் 2 பேரையும் கேரள போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: