ரஜினி படத்தை கிழித்து வீசி ோராட்டம்

கோவை, ஜன.24: பெரியார் பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவதூறு பேசியதாக கூறி அவருக்கு எதிராக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நேற்று மாலை போராட்டம் நடந்தது. புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மலரவன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மே 17 இயக்க நிர்வாகி சுந்தரமூர்த்தி, திராவிடர் தமிழர் கட்சி நிர்வாகி வெண்மணி, மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் பெரியார் நடத்திய மாநாடு, ஊர்வலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஆட்சேபகரமாக பேசியுள்ளார் என்றும், உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல் பெரியாருக்கு எதிரான கருத்துக்களை அவர் பதிவு செய்துள்ளார் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். மேலும் ரஜினிகாந்தின் உருவ படத்தை கிழித்து வீசி அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தடையை மீறி நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற 44 பேரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

Related Stories: