பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

கோவை, ஜன. 24: கோவை மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு குனியமுத்தூரில் உள்ள நேரு விமானவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் சுப்புலட்சுமி (பேரூர்) தலைமை தாங்கினார். கோவை நேரு கல்வி குழுமங்களின் மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன் வரவேற்றார். கோவை மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் செட்ரிக் இம்மானுவேல், ஆசிரியர்களுக்கு ‘காவலன் செயலி’ குறித்து விளக்கம் அளித்தார். விழாவில், கல்லூரி பேராசிரியர்கள், முதல்வர்கள், குனியமுத்தூர் காவல்துறை உதவி ஆய்வாளர் குப்புராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: