கோவையில் 3வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி

கோவை, ஜன. 24:கோவையில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டி இரண்டாவது முறையாக நடந்தது. தற்போது கோவையில் மூன்றாவது முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது விரைவில் ஜல்லிக்கட்டு நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு கோவை போத்தனூர்-செட்டிப்பாளையம் பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்து முடிந்தது. அதில் 740 காளைகள், 1,500க்கும் மேற்பட்ட காளையர்கள் போட்டியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்றாவது முறையாக அதே இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது, இதற்கான ஏற்பாடுகள் துவக்கப்பட்டுள்ளது. தற்போது மைதானத்தை சுத்தம் செய்யும் பணி துவங்கியுள்ளது.

Related Stories:

>