×

அடிப்படை பிரச்னையை நிறைவேற்ற கோரி தளவாய்ப்பேட்டையில் ஜன.28ல் உண்ணாவிரதம்

ஈரோடு,  ஜன.24: தளவாய்ப்பேட்டையில் மக்களின் அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்ற கோரி  வரும் 28ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த மா.கம்யூனிஸ்ட் திட்டமிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் தளவாய்ப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கிளை செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். கமிட்டி உறுப்பினர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். இதில், தளவாய்ப்பேட்டை பகுதியில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க காலை, மாலை இருநேரமும் தண்ணீர் விநியோகிக்க வேண்டும். தளவாய்ப்பேட்டை - வைரமங்கலம் செல்லும் பழுதடைந்த சாலையை புதிய தார்சாலையாக சீரமைக்க வேண்டும். வைரமங்கலம் புதிய பாலத்தில் சமூக விரோத செயல்கள் நடந்து வருவதால், அங்கு மின் விளக்குகள் பொருத்த வேண்டும். தளவாய்ப்பேட்டை பெரியமாரியம்மன் கோயில் அருகே அடிக்கடி உடையும் பிளாஸ்டிக் குடிநீர் குழாயினை உடனடியாக இரும்பு குழாயாக மாற்ற வேண்டும். தளவாய்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ரோட்டில் உயர்மின் கோபுர விளக்கும், பவானி ஆப்பக்கூடல் ரோட்டில் தொடர் விபத்து நடப்பதால் வேகத்தடையும் அமைக்க வேண்டும். தளவாய்ப்பேட்டை - பெரியமோளப்பாளையம் வரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தளவாய்ப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக நடந்து வரும் மது விற்பனையில் ஈடுபடுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அடிப்படை பிரச்னைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 28ம் தேதி தளவாய்ப்பேட்டை பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு