×

அந்தியூரில் தேங்காய் அறுவடை தீவிரம்

அந்தியூர், ஜன.24: அந்தியூர் பகுதியில் தேங்காய் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை, கரும்பு, மஞ்சள் மற்றும் மானாவாரி பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இருப்பினும், தென்னை நீண்ட கால பணப்பயிராக பலன் தரக்கூடியதால் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதில், அத்தாணி, கரட்டூர், கீழ்வாணி, முனியப்பம்பாளையம், சின்னத்தம்பி பாளையம், அந்தியூர், ஆப்பக்கூடல், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரி பகுதிகளில் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதால் விவசாயிகள் தேங்காய் அறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது அறுவடை செய்யும் இடத்தில் ஒரு தேங்காய் அதன் அளவை பொறுத்து ரூ.10 முதல் ரூ.15 வரையிலும், தேங்காய் பருப்பு கிலோ ரூ.100 முதல் ரூ.145  வரையிலும் விலை போகிறது. இதனால் விவசாயிகள், தாங்கள் விளைவித்த தேங்காயை அறுவடை செய்து விற்பனைக்கு தயார்படுத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு