மின்னொளியில் ஜொலிக்கும் ரயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம் குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

திருச்சி, ஜன.24: குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாதுகாப்ைப கருத்தில்கொண்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். வரும் 26ம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் உதவியுடன் பயணிகளிடம் சோதனையிட்டனர். குறிப்பாக ரயில் நிலையம், நுழைவு வாயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். இந்த சோதனை திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் மொய்தீன் உத்தரவின் பேரில், ெவடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுசித்குமார் ராய் தலைமையில், சப்.இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், மோப்ப நாய் ஜடோ உள்பட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

Tags : railway station ,Trichy ,
× RELATED ராயபுரம் ரயில் நிலையத்தில் மந்தகதியில் நடக்கும் தண்டவாள பணிகள்