பெண்ணிடம் நகை பறிப்பு

திருச்சி, ஜன. 24: திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி(55). இவர் காஜா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 பேர், ராஜாமணி கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துச்சென்றனர். இது குறித்து ராஜாமணி அளித்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பெண்ணிடம் நகை பறிப்பு