திருச்சியில் ஊராட்சி தலைவர்கள் து.தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு அமைச்சர் துவக்கி வைத்தார்

திருச்சி, ஜன.24: திருச்சி மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி வகுப்பை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று துவக்கி வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி மற்றும் தாத்தையங்கார் பேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி வகுப்பு திருச்சி புதிய கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துவக்கி வைத்து பயிற்சி கையேட்டினை வழங்கி பேசினார். மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், உதவி இயக்குநர்கள், மாவட்ட சமுதாய வள பயிற்றுனர் கவிதா ஆகியோர் கலந்துகொண்டனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று திருச்சி மாவட்டத்தில் லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் சார்ந்த ஊராட்சிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் ஆகியோருக்கு இன்று (24ம் தேதி) காலை 10.30 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம், அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் 2ம் கட்ட ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.

Tags : Inauguration ,Panchayat Leaders ,
× RELATED முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் துவக்கம்