பட்டமளிப்பு விழா விவசாயிகளுடன் வேளாண் அதிகாரி கலந்துரையாடல்


திருவெறும்பூர், ஜன.24: திருச்சி அருகே மணிகண்டம் வேளாண் துறை சார்பில் விவசாயிகளோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. திருச்சி அருகே உள்ள மணிகண்டம் வட்டாரத்தில் வேளாண்மை துறையின் கீழ் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அட்மா திட்டத்தின் மூலம் பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதன் செயல்பாடுகளை விருதுநகர் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் விஜயா ஆய்வு செய்தார். அட்மா திட்ட செயல்விளக்கத்திடல்களான மண்புழு உரகூடம் அமைத்தல், நீலப் பச்சைபாசி வளர்ப்பு ஆகியவை குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். ஆய்வின்போது திருச்சி மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) செல்வம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் சிறப்பு ஆலோசகர் சந்தானகிருஷ்ணன், வேளாண் உதவி இயக்குநர் கோமதி, வேளாண் அலுவலர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வல்லுநர்கள் செய்திருந்தனர்.

Tags : Graduation Ceremony ,
× RELATED மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா