திருச்சி ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி 28, 29ம் தேதிகளில் பயணிகள் ரயில்கள் ரத்து

திருச்சி, ஜன.24: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வரும் 28, 29 ஆகிய 2 நாட்களில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக பயணிகள் ரயில்கள் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி, திருச்சி- பாலக்காடு-திருச்சி  வண்டி எண் 56713, 56712 மற்றும் திருச்சி- ஈரோடு- திருச்சி பயணிகள் ரயில்வண்டி எண் 56109, 56110 ரத்து செய்யப்படுகிறது. மேலும் 29ம்தேதி, வண்டி எண் 56109 காரைக்காலிலிருந்து திருச்சி வரும் ரயில், வண்டி எண் 76842 திருச்சியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Trichy Railway Station ,
× RELATED சத்தமில்லாமல் சாதிக்கும் மாநிலம்:...