×

2வது நாளாக சோதனை பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 8 கடைகளுக்கு ரூ.16,000 அபராதம்

முத்துப்பேட்டை, ஜன.24: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் கடைகளில் நெகிழி மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருக்கிறதா? என்று சோதனை செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பேரூராட்சி சார்பில் நடத்திய சோதனையில் ஒரு பல்பொருள் கடையில் அதிகளவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் வகை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் அப்பகுதியில் இருந்த மேலும் 4 கடைகளில் சோதனை செய்யப்பட்டு தலா 2ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் 33ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று 2வது நாளாக நடந்த சோதனையில் பெரியக்கடை தெரு, பழைய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை பகுதியில் செயல் அலுவலர் தேவராஜ் தலைமையில் நேற்று சுகாதார மேற்பார்வையாளர்கள் வீரமணி, கார்த்திக் மற்றும் பணியாளர்கள் சோதனை செய்தனர். இதில் ஒரே நாளில் 8 கடைகளில் அதிகளவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் வகை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த பிளாஸ்டிக் வகை பொருட்கள் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு 8 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் ரூ.16 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

Tags : shops ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி