சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசை 5039 பேர் வாங்கவில்லை

சேலம், ஜன.24:  பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி ரேஷன் கார்டுதார்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, 2 அடி நீள கரும்பு  துண்டு, திராட்சை, முந்திரி தலா 20 கிராம்  மற்றும்  ஏலக்காய் 5 கிராம் மற்றும் ₹ 1000 ரொக்கம் விநியோகம் செய்யப்பட்டன. சேலம் மாவட்டத்தில் 1,577 ரேஷன் கடைகளில் 9.71 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அவற்றுக்கு கடந்த 9ம் தேதி முதல் 13ம் வரை பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டன. நுகர்வோர் நலன் கருதி பொங்கல் பெறுவதை 21ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டது. விடுபட்ட ரேஷன் கார்டுதாரர்கள் ஆர்வமுடன் பொங்கல் பரிசை பெற்று சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் 9.71 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தகுதி பெற்றவர்கள். இவர்களில், 9 லட்சத்து 66 ஆயிரத்து 189 பேர் பொங்கல் பரிசை பெற்றனர். 99.5 சதவீதம். 5ஆயிரத்து 39 பேர் பொங்கல் பரிசை வாங்கவில்லை,’ என்றனர்.

Related Stories: