இடைப்பாடியில் அஞ்சலி நிகழ்ச்சி

இடைப்பாடி, ஜன.24: சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவரும், மேட்டூர் முன்னாள் எம்எல்ஏவுமான கோபாலின் அண்ணன் பாப்பி. இவரது மனைவி சித்தம்மாள், உடல் நலக்குறைவால் கடந்த 21ம் தேதி உயிரிழந்தார். நேற்று முன்தினம், பூலாம்பட்டி கூடக்கல் தோட்டத்தில், இறுதி அஞ்சலி நடந்தது. இதில் சம்பத், கண்ணம்மாள், சந்திரா துரைசாமி ரெட்டி, சிவக்குமார், டாக்டர் நர்மதை, பாலசுப்ரமணியம், டாக்டர் ஆர்த்தி, டாக்டர் சூரிய ராஜேஷ். சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட பொருப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, எம்பிகள் சேலம் எஸ்.ஆர்.பார்திபன், தர்மபுரி செந்தில்குமார், தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்பி.கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழ்செல்வன், சின்னதுரை, மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் காசி, முருகேசன், அம்மாசி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி, சுப்ரமணியம், அன்பழகன், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், நகர செயலாளர்கள் மேட்டூர் காசிவிஸ்வநாதன், இடைப்பாடி பாஷா, ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், நல்லதம்பி, ராஜேஷ், ரவிசந்திரன், கவுசிராஜா, விவசாயி அணி துணை அமைப்பாளர் நாகராஜன், வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் சரவண மூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: