சேலத்தில் மதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொது கூட்டம்

சேலம், ஜன.24:சேலம் மத்திய மாவட்ட மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொது கூட்டம், நாளை (25ம் தேதி) மாலை 5 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் நடக்கிறது. மத்திய மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில், மதிமுக பொது செயலாளர் வைகோ எம்பி கலந்து கொண்டு பேசுகிறார். இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர். இதற்காக, வைகோ எம்பி நாளை(25ம் தேதி) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்து சேருகிறார். பின்னர் மாலையில் அவர் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார் என மத்திய மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார். 

Advertising
Advertising

Related Stories: