நேதாஜி பிறந்த நாள் விழா பேரணி

சேலம், ஜன.24: சேலத்தில்  பாரத் நேதாஜி பவுண்டேஷன் அமைப்பு சார்பில், நேதாஜியின் 123வது பிறந்தநாள்  விழா பேரணி நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகம் எதிரே தொடங்கிய பேரணிக்கு  அமைப்பின் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஸ்ரீ செண்டலங்கார செண்பக  மன்னார் ராமானுஜ மன்னார்குடி ஜீயர் கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.  இந்த பேரணி, கலெக்டர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலம்  வழியே சென்று, மீண்டும் கலெக்டர் அலுவலகம் எதிரே வந்து முடிந்தது.  பேரணியில், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நேதாஜிக்கு முழு உருவ வெண்கல  சிலை வைக்க வேண்டும், அவரின் பெயரை பஸ் ஸ்டாண்டிற்கு சூட்ட வேண்டும் என  வலியுறுத்தினர்.தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் அமைப்பின் மாநில  தலைவர் இப்ராஹிம் கலந்துகொண்டு பேசுகையில், “குடியுரிமை திருத்த சட்டம்  நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும். இச்சட்டத்தை வரவேற்கிறோம்,’’ என்றார்.  இதில், பாஜ மாநகர் மாவட்ட தலைவர் கோபிநாத், இந்து முன்னனி கோட்ட தலைவர்  சந்தோஷ்குமார், பவுண்டேஷன் நிர்வாகிகள் ராஜாராமன், கார்த்திக், ராசி  சரவணன், பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேரணி முடிவில்  ராமானுஜ மன்னார்குடி ஜீயர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தஞ்சை பெரிய  கோயிலில் ஆகம விதிப்படியும், சமஸ்கிருதம் கலந்த தமிழில் குடமுழுக்கு  நடத்துவதில் தவறு இல்லை. தமிழர்களின் தாய் மொழி தமிழ் என்பதால், தமிழில்  நடத்தலாம்,’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: