குடியரசு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் நாளை மறுநாள் மூடல்

சேலம், ஜன.24:குடியரசு தினத்தையொட்டி நாளை மறுநாள், டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அறிவிப்பின்படி குடியரசு தினத்தில் (26ம் தேதி) மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் மூடப்பட வேண்டும். மேலும், அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இந்த உத்தரவை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: