குழந்தை சிகிச்சைக்கு வந்த பணத்தில் மதுகுடித்த கணவரை கண்டித்து தூக்கில் தொங்கிய இளம்பெண்

சேலம், ஜன. 24: சேலம் சூரமங்கலம் கல்யாணசுந்தரம் காலனியை சேர்ந்தவர் ராஜூ. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மலர்(22). இவர்களின் 6 மாத கைக்குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த தொகையை எடுத்து ராஜூ மதுகுடித்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்து போன மலர், நேற்று மாலை வீட்டில் தூக்கில் தொங்கினார்.  அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் வீராணம் பக்கமுள்ள மூக்கனூரைச்சேர்ந்தவர் குமார். இவரது மனைவி  செல்வி(36). கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் செல்வி அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: