×

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹1.50 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், ஜன.24:  நாமக்கல் வேளாண்மை  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. மொத்தம் 7 ஆயிரம் மூட்டை பருத்தி  சங்கத்துக்கு விவசாயிகளால் கொண்டு வரப்பட்டிருந்தது. கூட்டுறவு சங்க அலுவலர்கள் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடத்தினர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் கேட்டனர். ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ₹5,119 முதல் ₹5,680 வரையும், டிசிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ₹6,219 முதல் ₹6,899 வரை ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 7 ஆயிரம் மூட்டை பருத்தி, ₹1.50 கோடிக்கு ஏலம் நடைபெற்றது.

Tags : Cotton auction ,Namakkal Co-operative Society ,
× RELATED நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்