ஊத்தங்கரை பள்ளி மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்


ஊத்தங்கரை, ஜன.24:  தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, ஊத்தங்கரை தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு கல்பி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஊத்தங்கரை தொடக்கப்பள்ளியில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் முருகன் தலைமை வகித்தார். ஆண்கள் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் சத்தான உணவுப் பொருட்கள் ஆகியவற்றை, தொண்டு நிறுவன நிர்வாகிகள் ரமா, லட்சுமி, சின்னத்தாய் உள்ளிட்டோர் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜேஆர்சி ஆசிரியர் கணேசன் செய்திருந்தார்.

Tags : school students ,
× RELATED நடப்பு கல்வியாண்டு முடிய உள்ள...