×

ஊத்தங்கரை அருகே காட்சி பொருளான குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

ஊத்தங்கரை, ஜன.24: ஊத்தங்கரையை அருகே புதூர் புங்கனை பஞ்சாயத்தில் உள்ளது மேட்டுக்காடு கிராமம். இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி முமுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். கடந்த 10 ஆண்டுகளாக போதிய அளவு பருவமழை பெய்யாததால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவியது. இதனை போக்கும் விதமாக கடந்த 2012-2013ம் ஆண்டு தமிழக அரசால் ₹6.35 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி ஓன்று அமைக்கப்பட்டது. இந்த தொட்டிக்கு என தனியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால், கட்டிமுடிக்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இதுவறை கொண்டுவர வில்லை. இதனால், இப்பகுதி பொதுமக்கள் வறட்சி காலங்களில் தேவையான தண்ணீருக்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரமுள்ள தென்பெண்ணை ஆற்றிக்கு செல்ல வேண்டி நிலை உள்ளது.

அங்கும் தண்ணீர் இல்லாத பட்சத்தில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காட்சி பொருளான குடிநீர் தொட்டியை திறக்க கோரி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை மனு கொடுத்து விட்டோம். ஆனால், எந்தவித பயனும் இல்லை. எனவே, எதிர்வரும் கோடை காலத்தில் ஏற்படும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்க போகிறோம் என்றே தெரியவில்லை. எனவே, புதியதாக தேர்ந்தெடுக்கப்படுள்ள உள்ளாட்சி நிர்வாகிகள் குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Uthangarai ,
× RELATED நாட்டுத்துப்பாக்கியை பதுக்கிய 2 பேர் கைது