திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

ஓசூர், ஜன.24: திமுக மாணவரணி சார்பில் ஓசூரில் நாளை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜா தலைமை வகிக்கிறார். சத்யா எம்எல்ஏ வரவேற்கிறார். ஒன்றிய செயலாளர்கள் சீனிவாச ரெட்டி, சின்னபில்லப்பா, திவாகர், நாகேஷ், ரகுநாத், கணேசன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக தீர்மானக்குழு துணைத்தலைவர் மாசிலாமணி, மாவட்ட துணை செயலாளர் வேப்பனப்பள்ளி முருகன் எம்எல்ஏ, தலைமை கழக பேச்சாளர் தமிழ்சாதிக், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் தனலட்சுமி, சீனிவாசன், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுகுமாரன், வீராரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜெயக்குமார் நன்றி கூறுகின்றனர். இவ்வாறு தனது அறிக்கையில் பிரகாஷ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Tags : day meeting ,student ,DMK ,
× RELATED தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்