×

விலை சரிவால் பறிக்காமல் செடியிலேயே விடப்பட்ட சாமந்தி பூக்கள்

நல்லம்பள்ளி, ஜன.24:  தொப்பூர் பகுதியில் சாமந்தி பூக்கள் விலை சரிவால் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விவசாயிகள் விட்டுள்ளனர். நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் பகுதியில் 100 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில், வெள்ளை மற்றும் மஞ்சள் நிற சாமந்தி பூக்களை, விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு தயாராக உள்ள சாமந்தி பூக்களை விவசாயிகள் அறுவடை செய்து பெங்களூரு மற்றும் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், தற்போது சாமந்தி பூக்களை குறைவான விலைக்கு வாங்குவதால், தோட்டத்திலேயே பறிக்காமல் விவசாயிகள் அப்படியே விட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த ஒரு வாரத்திற்கு முன், ஒரு கிலோ சாமந்தி பூக்கள் ₹80 முதல் 150 வரை விற்பனையானது. தற்போது கிலோ ₹10 முதல் ₹20க்கு தான் விற்பனை ஆகிறது. இதனால் பூக்களை அறுக்கும் ஆட்களுக்கு கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பறிப்பு கூலி கூட கிடைக்காததால், சாமந்தி பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளோம்,’ என்றனர்.

Tags : plant ,
× RELATED கழிவுநீர் கால்வாய் அடைப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்