×

புளுதியூர் சந்தையில் ₹26 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர், ஜன.24: அரூர் அருகே புளுதியூர் வார சந்தையில் ₹26 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன் கிழமையில் சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இங்கு கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்க வியாபாரிகள் இங்கு வருகின்றனர். இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் ₹26 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஒரு மாடு ₹17,700 முதல் ₹43,500 வரையும், ஆடு விலை ₹4700 முதல் ₹9300 வரை விற்பனையானது. நேற்று மட்டும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, ஓசூர் மற்றும் ஆனைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான வியாபாரிகள் வந்திருந்தனர்.

Tags : Puthiyoor ,
× RELATED புளுதியூர் சந்தையில் 25 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை