×

நேதாஜி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

அரூர், ஜன.24: அரூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேதாஜி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அரூர் ரவுண்டானா அருகே, நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பிறந்த நாள் விழா, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு, நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து தேசிய ஒருமைப்பாடு உறுதி மொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து, அரூர் வட்டார தலைவர் சுபாஷ், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார தலைவர் பூபதி ராஜா, ஓபிசி தலைவர் நவின், மாவட்ட செயலாளர்கள் செல்வம், வெங்கடாசலம், வேடியப்பன், பட்டதாரி பிரிவு மாநில செயலாளர் அருட்ஜோதிமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Netaji Birthday Celebration ,
× RELATED நேதாஜி பிறந்தநாள் விழா