×

இலக்கியம்பட்டியில் உயர்நிலைப்பள்ளியை

தரம் உயர்த்த கோரிக்கைதர்மபுரி, ஜன.24: இலக்கியம்பட்டி பெண்கள் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலக்கியம்பட்டி ஊராட்சியில், கடந்த 1998ம் ஆண்டு முதல் பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இலக்கியம்பட்டி, செந்தில்நகர், கலெக்டர் அலுவலகம், ஏமக்குட்டியூர், பட்டாளம்மன் கோவில் பகுதி, பாரதிபுரம் பகுதிகளை சேர்ந்த மாணவிகள் 320 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதாலும் பிளஸ்1 சேர்ப்பதில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவும், இந்த பகுதி மக்கள் தங்களது குழந்தைகளை 6ம் வகுப்பில் சேர்க்க தயக்கம் காட்டி வந்தனர். பள்ளியின் தரம் உயர்த்த தேவையான பொதுமக்கள் பங்களிப்பாக ₹2 லட்சம் பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், பல வருடங்களாக இப்பள்ளியை தரம் உயர்த்துவதில் மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் தயக்கம் காட்டி வருகிறது. எனவே, நடப்பாண்டிலாவது இலக்கியம்பட்டி பெண்கள் உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா