×

123வது பிறந்தநாள் விழா நேதாஜி போட்டோவுக்கு கம்பீர வீரவணக்கம் செலுத்திய தியாகி

பெரம்பலூர், ஜன.24: நேற்று நேதாஜியின் 123வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது போட்டோவுக்கு மாலையிட்டு ஜெய்ஹிந்த் முழக்கத்துடன், பெரம்பலூர் தியாகி ரெங்கசாமி கம்பீரமாக வீரவணக்கம் செலுத்தினார். வாணிபம் நடத்த வந்த வெளிநாட்டினர் நம்மை அடிமைப் படுத்தி ஆட்சி செய்த னர். அடிமைத் தனத்திலிருந்து மீள அகிம்சைவழியில் காந்தியடிகள் போரா டியபோது, பர்மா வழியாகப் படை நடத்தி ஆயுத மேந்திப் போராடியவர்தான் சுபாஸ் சந்திரபோஸ். காந்தியடிகள் வழியைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் இறங்கிய லாடபுரம் குருசாமி போன்ற தியாகிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரு மளவு இருந்திருந்தாலும், போர் நடத்தி போராட துணி ந்த சுபாஸ் சந்திர போஸ் உருவாக்கிய, இந்திய தேசி ய இராணுவத்திற்கும் பெர ம்பலூர் மாவ ட்டத்திலிருந் து அணிதிரண்டு சென்ற தியாகிகள் ஏராளம்.

71வது சுதந்திர தினத்தை கொண்டாடும் தருணத்தில் எஞ்சியிருக்கும் தியாகிகள் எத்தனை பேரென்று தேடிப் பார்த்தால் மிஞ்சியிருக்கும் இருவரில் வரகுபாடி ரெங்க சாமி (88) என்பவரும் ஒரு வர். ஆலத்தூர் தாலுக்கா, வரகுபாடி கிராமத்தில் பிறந்த ரெங்கசாமி தனது 16வது வயதில் சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார். பெரம்பலூர் மாவட்ட அளவில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளெல்லாம் 98 சதவீதம் இறந்துவிட்ட நிலையில் எஞ்சியுள்ள ரெங்கசாமிக்கு இந்திரா காந்தி பெயரால் வழங்கப்படும் தொகுப்பு வீடுகூட வழங்கப்படாத நிலையில், குடியிருந்த கூரைவிடும் குட்டிச்சுவரானதால் பெர ம்பலூரில் உள்ள மகளின் வீட்டில்தான் தஞ்சமடைந்துள்ளார்.

மனைவி செல்லம் இறந்த பிறகு, 3மகள்களில் கலெக்டர் அலுவலகம் அருகே யுள்ள மூத்தமகள் செல்லப் பாப்பு வீட்டில் குடியிருந்து வருகிறார். சுதந்திரப் போ ராட்டத் தியாகிகளில் பெரும்பாலானோர் குடும்பத்தாருக்கு மத்திய அரசின் உத வித் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், ரெங்கசாமி மட்டும் மாநிலஅரசின் நிதியைத்தான் பெற்று வருகிறார். இந்திய தேசிய ராணுவம் பற்றிக் கேட்டாலே பரவசமாகும் ரெங்கசாமி, பர்மாவைத் தலைமையிடமாகக் கொண்டு, ஜப்பான், ஜெர்மன் நாடுகளின் ஆயு த உதவியுடன், ரைபில் முதல் டாங்கிவரை கையாள பயிற்சி பெற்றோம். போஸ் தலைமையில் போர் நடத்தத் தயாராக இருந்தபோது தான் மாயமானார் என்றதும் கண்ணீர் வடிக்கிறார். நேற்று சுபாஸ் சந்திரபோஸின் 123வது என்பதை மறவாத ரெங்கசாமி ஒரு மாலை வாங்கி வரச் செய்து போஸ் போட்டோவுக்கு அணிவித்துவிட்டு கம்பீர மாக நெஞ்சை நிமிர்த்தி ஜெய்ஹிந்த் என முழங்கியவாறு காண்பவர் மெய்சிலிர்க்க வீர வணக்கம் செலுத்தினார்.சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பெரம்பலூ ர் மாவ ட்டத்திற்கும் பங்களி த்த தியாகிகளைத் தொழுது வணங்கா விட்டாலும், அவ ர்களுக்குத் தொகுப்பு வீடாவது கொடுத்துத் துணை நிற்க வேண்டும். சுதந்திர தின, குடியரசுதின விழாக்களில் பொன்னா டை அணிவிப்பதோடு விட்டுவிடாமல், அவரின் வாழ்வாதாரத்திற்கும் வழிகாண வேண்டும்.

Tags : Birthday Celebration ,
× RELATED முதல்வர் பிறந்தநாள் விழா கால்பந்து...