×

திருச்சுழி அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருச்சுழி, ஜன. 24: திருச்சுழி அருகே நரிக்குடி சாலையில் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நரிக்குடி காவல்துறையினர் சார்பில் சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நரிக்குடி மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சுழி காவல்துணைக் கண்காணிப்பாளர் சசிதர், நரிக்குடி காவல் ஆய்வாளர் ஜேசு ஆகியோர் மாணவர்கள் மத்தியில் சாலைப்பாதுகாப்பு குறித்து விளக்கினர். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா, திருச்சுழி டிஎஸ்பி சசிதர் மற்றும் காவல்ஆய்வாளர் ஜேசு இணைந்து துவக்கி வைத்தனர்.

பள்ளியில் இருந்து துவங்கிய பேரணியானது திருப்புவனம் சாலை, ராமநாதபுரம் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நரிக்குடி காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. இந்த சாலை பாதுகாப்பு பேரணியில் பள்ளி மாணவர்கள் சாலையில் முந்தாதே வாழ்க்கையில் முந்து, ஓடும் பேருந்தில் ஏறாதே உயிரை பயணம் வைக்காதே, மது அவுந்தி வாகனம் ஓட்டாதே, சீட் பெல்ட் அணிவீர் போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு மாணவ, மாணவிகள் மலர்கள் கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
 இதே போன்று கல்லூரணியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களிடம் சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது. மேலும் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு கல்லூரணியில் தலைக்கவசம் அணிந்து காவலர்கள் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

Tags : Road safety awareness rally ,Tiruchi ,
× RELATED பாஜவுடன் கூட்டணியால் 80 ஆயிரம் ஓட்டு...