×

அருப்புக்கோட்டையில் அதிமுக பொதுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு

அருப்புக்கோட்டை ஜன. 24: அருப்புக்கோட்டையில் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளக்கோட்டை மேலரதவீதியில் நடந்தது. முன்னாள் ஒன்றிய சேர்மன் யோக வாசுதேவன் தலைமை வகித்தார். நகர அவைத்தலைவர் பம்பாய்மணி, பொருளாளர் செந்தமிழ் செல்வன், இலக்கிய அணிச் செயலாளர் புளியம்பட்டி சீனிவாசகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்வேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட செயலாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: எம்ஜிஆர் பிறந்தநாளை இன்றைக்கு கொண்டாடுகிறோம் என்று சொன்னால் மனிதாபிமான மிக்க தலைவர் பிறருக்கு அள்ளிக்கொடுக்கின்ற உள்ளம் கொண்ட தலைவர் எம்ஜிஆர்.  எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா இருந்தார். கிராமப்புறங்களில் படிப்பறிவு இல்லாத ஏழைகளை படிக்க வைக்கவும், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக.
அருப்புக்கோட்டையில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. பொதுமக்கள் குடிநீருக்காக கஷ்டப்படுகின்றனர். குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்ப்பதற்காக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் சீவலப்பேரியிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் ஆகிய 3 நகராட்சி பகுதிகளுக்கும் ரூ.444 கோடி செலவில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான பணிகள் விரைவில் துவங்கும். எனது சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள குருந்தமடம். அதனால் அருப்புக்கோட்டையை பற்றி எனக்கு நன்றாக தெரியும்.  அவர்களின் கஷ்ட நஷ்டங்களில் என்றைக்கும் உறுதுணையாக இருப்பேன். நெசவாளர்கள் அதிகம் வாழும் பகுதியாக இருப்பதால் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் வீட்டுவசதி சங்கத்தலைவர் கருப்பசாமி பாண்டியன், மகளிர் அணி நகரச் செயலாளர் பிரேமா, நெசவாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் முனியசாமி, நகரச் துணைச் செயலாளர் தர்மர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர அம்மா பேரவை செயலாளர் சோலை சேதுபதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை நகரச்செயலாளர் சக்கதிவேல் பாண்டியன் செய்திருந்தார்.

Tags : Rajendra Balaji ,AIADMK ,meeting ,Aruppukkottai ,
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...