×

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கூட்டம்

ராஜபாளையம், ஜன. 24:  ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பில் அய்யனாபுரத்தில் எம்.ஜி.ஆர். 103வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தலைமை வகித்தார். தலைமைக் கழக பேச்சாளர் லட்சுமணன் பேசினார். 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் கந்தகிருஷ்ணகுமார், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராம்ராஜ்பாண்டியன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், சாத்தூர் நகர செயலாளர் வாசன், ஒன்றிய அவைத்தலைவர் முருகானந்தம், ஒன்றிய துணை செயலாளர் பழனிச்செல்வம், ஒன்றிய பொருளாளர் சுப்பையாதுரை, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் முருகபூபதி, புரட்சி தலைவி அம்மா பேரவை கிழக்கு ஒன்றிய தலைவர் சீதாராம் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலராஜகுலராமன் பஞ்சாயத்து தலைவர் விவேகானந்தன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன் செய்திருந்தார்.

Tags : MGR ,Birthday meeting ,
× RELATED பேட்டை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதி...