×

கருநாக்கமுத்தன்பட்டி மக்கள் புகார் வரிவசூல் மந்தம் நிதி நெருக்கடியில் தேனி நகராட்சி

தேனி, ஜன. 24: தேனி நகராட்சியில் வரி வசூல் மிகவும் மந்த நிலையில் இருப்பதால், நகராட்சி நிர்வாகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. தேனியில் சொத்துவரி மூலம் ஆண்டுக்கு 4 கோடியே 50 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய், காலியிட வரிமூலம் 9.20 லட்சம் ரூபாய், தொழில் வரி மூலம் 78 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய், குடிநீர் வரி மூலம் ஒரு கோடியே 75 லட்சத்து ஆயிரம் ரூபாய், குத்தகை இனங்கள் மூலம் 3 கோடியே 10 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய், குப்பை வரி மூலம் 48 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய், பாதாள சாக்கடை மூலம் 37 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் உட்பட மொத்தம் 10 கோடியே 9 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் வரிவசூலாகிறது. இந்த வரியினை முழுமையாக ஜனவரி 31ம் தேதிக்குள் கட்டாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் இதுவரை 36 சதவீதம் மட்டுமே வரிவசூல் ஆகி உள்ளது. இதனால் தினசரி செலவினங்களுக்கு கூட பணம் போதாமல் நகராட்சி நி்ர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாகவும், அரசிடம் இருந்தும் பெரிய அளவில் நிதி வரவில்லை என்றும், மீதம் உள்ள வரிப்பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகளில்  தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு உடனே விண்ணப்பிக்கலாம்