பெரியகுளம் பகுதியில் வெற்றிலையில் வாடல் நோய்

பெரியகுளம், ஜன.24:  பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வடுகபட்டி, ஜெயமங்கலம், தாமரைக்குளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை விவசாயம் செய்து வந்த விவசாயிகள் வாடல் நோய் தாக்குதல் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டதால் தற்போது 100 ஏக்கர் அளவில் மட்டுமே வெற்றிலை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பெரியகுளம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள வெற்றிலையில் வாடல் நோய் தாக்குலால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நடவடிக்கை எடுத்து வாடல் நோயினை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பெரும் நஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Periyakulam ,area ,
× RELATED பெரியகுளம் கண்மாயில் தடுப்புச்சுவர் தேவை