×

வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் பெரியகுளத்தில் கைது

பெரியகுளம், ஜன.24: பெரியகுளம் தென்கரை முத்துராஜா தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் முருகேசன் மனைவி பரிமளா தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறக்கும் சத்தம் கேட்டதை அறிந்த பரிமளா சத்தம் போடவே அருகில் இருந்த வீட்டில் இருந்து வந்த சிலர் வீட்டில் ஒளிந்திருந்த வாலிபரை பிடித்தனர். அவரை தென்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  விசாரணையில் திருட முயன்ற வாலிபர் பெரியகுளம் தென்கரையை சேர்ந்த அஜித்குமார்(24) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : house ,
× RELATED புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக...