சாலை பாதுகாப்பு வார விழா


சிவகங்கை, ஜன. 24: சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி செயலர் சேகர் தலைமை வகித்தார். சாலை விதி முறைகள், ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது, சாலையை கடக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்பட சாலை பாதுகாப்பு விதிமுறைகள், ஏன் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் முத்துக்குமார், உதவி தலைமை ஆசிரியர் தியாகராஜன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED சாலைப்பாதுகாப்பிற்கு தனிப்பிரிவு...