சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியபோட்டி

மானாமதுரை, ஜன. 24: இடைக்காட்டூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரன் தலைமை வகித்தார். முதுகலை கணித ஆசிரியர் வெங்கடாஜலபதி வரவேற்றார். விழாவில் சாலைப்போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியப்போட்டி நடைபெற்றது. மாணவர்கள் வாட்டர் கலர், அக்ரிலிக் கலர் மற்றும் ஆயில் கலர் போன்ற வண்ணங்களில் பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்திருந்தனர். நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர். ஓவிய ஆசிரியர் செல்வம் சிறந்த படைப்புகளை தேர்வு செய்திருந்தார். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பரிசுகள் வழங்கினார். முதுகலை இயற்பியல் ஆசிரியர் நன்றி கூறினார்.

Tags :
× RELATED சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியபோட்டி