×

காளையார்கோவிலில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் அடிக்கடி விபத்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

காளையார்கோவில், ஜன. 24: காளையார்கோவிலில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காளையார்கோவிலில் உள்ள மதுரை- தொண்டி நெடுஞ்சாலை 2012ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இருவழி பாதையாக இருந்த இச்சாலை தற்போது நாளுக்குநாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் ஒருவழிச்சாலையாக மாறி வருகிறது. இதனால் சாலையின் அகலம் குறைந்து அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் காளையார்கோவில் பஸ்நிலையத்தில் இருந்து கல்லல், காரைக்குடி திரும்பும் வளைவு மற்றும் போலீஸ் ஸ்டேஷன், பரமக்குடி திரும்புகள் வளைவுகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக டூவீலர்ஓட்டிகள் விபத்தில் அதிகம் சிக்கி வருகின்றனர். எனவே காளையார்கோவிலில் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றுவதுடன் மீண்டும் ஆக்கிரமிக்கா வண்ணம் கண்காணிக்க வேண்டும். அதேபோல் விபத்துகளை தடுக்க காளையார்கோவில் துணை மின்நிலையத்தில் இருந்து சூசையப்பர்பட்டிணம் விளக்கு வரையிலும் உள்ள இருவழிச்சாலையை ஒருவழிச்சாலையாக தற்காலிக தடுப்புகள் அமைக்க வேண்டும், போலீஸ் ஸ்டேஷன்- பரமக்குடி வளைவு, கல்லல்- காரைக்குடிக்கு திரும்பும் வளைவுகளில் ரவுண்டானா அமைக்க வேண்டும், காலை- இரவு நேரங்களில் போக்குவரத்து போலீசார் மூலம் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : park ,
× RELATED கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில்...