×

குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுவதால் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா தொண்டி மக்கள் வலியுறுத்தல்


தொண்டி, ஜன.24:   தொண்டியில் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளது. போலீசார் பற்றாக்குறையை பயன்படுத்தி இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. மேலும் அடையாளம் தெரியாத வாகன விபத்தும் நடக்கிறது. இதுகுறித்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க  முடியாமல் போலிசார் திணறி வருகின்றனர். கடந்த மாதம் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் மெடிக்கல் மற்றும் மளிகை கடையில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இப்பகுதியில் கேமரா இல்லாததால் யார் குற்றவாளி என கண்டறிய முடியவில்லை. சில கடைகளில் கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும் இதுபோன்ற இடங்களில் இல்லாதது போலீசார் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த வருடம் தொண்டி செக்போஸ்ட் பகுதி, வட்டாணம் ரோடு, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதியில் அரசின் சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது. ஆனால் இன்று வரையிலும் அது காட்சி பொருளாகவே உள்ளது. பேங்கில் இருந்து பணம் எடுத்து வந்தவரிடம் பைக்கில் வந்த ஆசாமி பட்டப்பகலில் பணத்தை பறித்து சென்றார். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுபோன்ற சம்பங்களை தடுக்க குறிப்பிட்ட இடங்களில் கேமரா இருந்திருந்தால் பிடித்திருக்கலாம் என போலிசார் கூறுகின்றனர்.

வாகன சோதனை, ஹெல்மெட் என தீவிரம் காட்டும் மாவட்ட நிர்வாகம் பெருநகரங்களில் இருப்பது போல் தொண்டியிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தெருக்களில் நடக்கும் திருட்டு சம்பவங்கள் எப்படியும் ரோட்டில் வந்து வாகனத்தில் தான் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வந்து செல்லும் வாகனங்களை வைத்தே திருடர்களை பிடித்து விடலாம் என்ககின்றனர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி விரைவில் தொண்டியின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர் சம்சுதீன் நவர் கூறியது, பல வருடங்களாக செக்போஸ்ட், வட்டாணம் ரோடு, ஆஸ்பத்திரி அருகில் கேமரா கூண்டு காட்சி பொருளாகவே இருக்கிறது. ஒவ்வொரு விபத்து மற்றும் திருட்டு சம்பவங்களின் போது மட்டுமே அதிகாரிகள் இதில் கேமரா செயல்படவில்லை என்கிறார்கள், அதன் பிறகு மறந்து
விடுகிறார்கள். சிலகடைகளில் கேமரா உள்ளது. அது அவர்களை மட்டுமே பாதுகாக்கும் ரோடு மற்றும் தெருவின் ஒவ்வொரு பகுதியிலும் கேமரா பொருத்தினால் பல்வேறு குற்ற சம்பங்களை தடுத்துவிடலாம் என்றார்.

Tags : areas ,surveillance camera volunteers ,
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்