×

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சாயல்குடி, ஜன.24:  திருஉத்திரகோசமங்கை மற்றும் சாயல்குடி பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் தை மாத சிறப்பு பிரதோஷ வழிபாடு  நடந்தது. தை மாத சிறப்பு பிரதோசத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோயிலுள்ள நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. சாயல்குடி அருகே மாரியூர் பவள நிறவள்ளியம்மன் சமேத பூவேந்திய நாதர், மேலக்கிடாரம் சிவகாமி அம்பாள் சமேத திருவனந்தீஸ்வரமுடையார், சாயல்குடி மீனாட்சியம்மன் சமேத கைலாசநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி சமேத செஞ்சிடைநாதர், மங்களம் ரேணுகாம்பாள் சமேத ஆதிசிவன் ஆகிய  கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள், விஷேச பூஜைகள் நடந்தது.
கோயில்களிலுள்ள நந்திதேவருக்கு 11 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன், தீபாராதனைகளும், கூட்டு பஜனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Shiva ,temples ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு