×

அஜ்மீர் பைசாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் ராமநாதபுரத்தில் நின்று செல்ல கோரிக்கை

சாயல்குடி, ஜன. 24: ராமேஸ்வரத்திலிருந்து வரும் அஜ்மீர் பைசாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் ராமநாதபுரத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ரயில்வே கோட்ட மேலாளர் ரதிபிரியாவிடம் தேமுதிக மாநில மாணவரணி துணை செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் பொதுமக்கள் சார்பில் அளித்துள்ள கோரிக்கை மனுவில், ‘‘தமிழகத்திலுள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் சிறப்பு வாய்ந்தது ராமேஸ்வரம். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மட்டுமின்றி, வடமாநிலங்களிலிருந்து தினந்தோறும் சுற்றுலா பயணிகள், ஆன்மீக யாத்திரீகர்கள் வந்து செல்கின்றனர். இதுபோன்று அருகிலுள்ள ஏர்வாடி தர்ஹாவிற்கும் வந்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இந்து, முஸ்லீம் மக்களும் வெளிமாநில ஆன்மீக தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும், வர்த்தகர்களும் தினந்தோறும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் போதிய ரயில் போக்குவரத்தின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து இயக்கப்படும் அஜ்மீர் பைசாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் ராமநாதபுரம் வழியாக சென்றாலும், ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை, இங்கு முன்பதிவும் கிடையாது. எனவே அந்த சிறப்பு ரயில் ராமநாதபுரத்தில் நின்று செல்ல அனுமதி வழங்க வேண்டும், தெற்கு ரயில்வேயின் சார்பில் கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Ajmer Faizabad Express Train ,Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...