×

தெப்ப திருவிழாவிற்கு தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

திருப்புத்தூர், ஜன.24: திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற 108 வைணவத் தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சௌமிய நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மகதெப்ப உற்சவம் விழா சிறப்பாக நடைபெறும். இந்த தெப்ப உற்சவத்திற்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி அருகில் உள்ள பல மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதில் முக்கிய நிகழ்வாக கோயிலின் அருகே தி.வயிரவன்பட்டியில் உள்ள கோயில் குளமான ஜோசியர் தெப்பக்குளப் படிக்கட்டிலும், குளத்தை சுற்றிலும் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

இதனால் தெப்பக்குளத்தில் உள்ள நீர் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது. இந்தாண்டு மாசி தெப்ப உற்சவம் வரும் மார்ச் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருக்கோஷ்டியூர் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில், மடக்குளம் கண்மாய் பகுதியில் ஆழ்குழாய் அமைத்து சுமார் 2 ஆயிரம் அடி தூரத்திற்கு பைப் குழாய் பதித்து நேற்று முதல் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் தெப்ப திருவிழாவிற்குள் தெப்பக்குளத்தில் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கும் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Tags : festival ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!