×

2 மாதத்தில் 1,000 ஆங்கிலசொல் கற்க மாணவர்களுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


மதுரை, ஜன.24: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 2 மாதத்திற்குள் 1000 ஆங்கில சொற்களை கண்டிப்பான முறையில் கற்றுக்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் நேற்றிரவு நடந்தது. பகுதிச்ெசயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்ைடயன் பேசுகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 2 மாதத்திற்குள் 1000 ஆங்கில சொற்களை கண்டிப்பான முறையில் கற்று, ஆங்கிலம் சரளமாக பேசும் வகையில் பயிற்சி அளிக்கப்படும். இதன்மூலம் விரைவில் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் சரளமாக பேசுவர். இது பிளஸ் 2 படிக்கும் போதே வேலை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமையும். இந்தியா முழுவதும் இன்ஜினியரிங் படித்தவர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இதேபோல் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களும் வேலையில்லாமல் உள்ளனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் சரளமாக பேசுவதின் மூலம் இந்த நிலை மாறும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், வில்லாபுரம் ராஜா, திரவியம், பரவை ராஜா, பைக்காரா கருப்புசாமி உள்பட பலர் பேசினர்.

Tags : Sengottaiyan ,learners ,
× RELATED அதிமுகவுடன் கூட்டணியா?… எடப்பாடியுடன் உரையாடிய ஜி.கே.மணி