மூன்று மாதமாக சம்பளம் ‘கட்’ பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் திருநகரில் பரபரப்பு

திருப்பரங்குன்றம், ஜன.24: திருநகரில் மூன்று மாதமாக சம்பளம் வழங்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆசிரியர்கள், ஊழியர்கள் தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருநகரில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்குகட்நத 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று மாலை பள்ளி வேலை நேரம் முடிந்தவுடன் ஆசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். மூன்று மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்கக்கோரி கோசமிட்டனர். சுமார் ஒரு மணி நேரமாகியும் அவர்கள் போராட்டத்தை கைவிடாததால் சம்பவ இடத்திற்கு திருநகர் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் வந்தனர். போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளி வளாகத்தினுள் அமர்ந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மூன்று மாத சம்பள பாக்கியை வழங்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதனால் திருநகரில் பரபரப்பு நிலவியது.

Related Stories: