மறுசுழற்சிக்கு சென்ற 650 கிலோ காலணிகள்

திருமங்கலம், ஜன.24: திருமங்கலம் நகராட்சியை மாசில்லா நகராக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நகரில் தினசரி சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக மாற்றும் நகராட்சி கடந்த மாதம் மக்காத குப்பைகளை அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைத்தது. இதே போல் நகராட்சி துப்புரவு வாகனங்கள் மூலமாக சேகரிக்கப்பட்ட 650 கிலோ பழைய காலணிகள் தரம் பிரிக்கப்பட்டு நேற்று லாரி மூலமாக மறுசுழற்சிக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கபட்டதாக நகராட்சி ஆணையாளர் சுருளிநாதன், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் தெரிவித்தனர்.

Related Stories: