குஜிலியம்பாறை ராமகிரி பெருமாள் கோயிலில் பிப்.7ல் கும்பாபிேஷகம் நிதி பங்களிக்க வேண்டுகோள்

குஜிலியம்பாறை, ஜன. 24: குஜிலியம்பாறை அருகே ராமகிரி பெருமாள் கோயிலில் பிப்.7ல் நடக்கும் கும்பாபிஷேக விழாவிற்கு அனைத்து மக்களும் நிதி பங்களித்து ஒத்துழைக்க வேண்டும் என திருப்பணி கமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.

குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு  கல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் திருமண கோலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது இக்கோயில் தனிச்சிறப்பு. இங்கு தேவி, பூதேவி சிலைகளுடன் கமலவள்ளி தாயாருக்கு தனி கோயிலும் உள்ளது. லண்டகிதிரழகு சாமையநாயக்கர் மன்னர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் கிபி 1924ம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இக்கோயிலின் கட்டிடங்கள் போதிய பராமரிப்பின்றி விரிசல் விட தொடங்கி சேதமடைந்தது. இதையடுத்து, இக்கோயிலில் பராமரிப்பு பணிகள் செய்து புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இக்கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இந்து சமய அறநிலையத்துறையினர் கிடப்பில் போட்டு விட்டனர்.இதையடுத்து கோயிலை புனரமைத்து புதுப்பிக்க பொதுமக்கள் சார்பில் திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டது. தொடர்ந்து தொழிலதிபர்கள், வணிகர்கள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் கடந்த 2007ம் ஆண்டு கட்டுமான பணிகள் துவங்கியது. 12 ஆண்டுகள் நடந்து வந்த இத்திருப்பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் பி்ப்.7ம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது. இதன் செலவிற்காக அனைத்து தரப்பினரிடமும் நன்கொடை நிதி திரட்டப்பட்டு வருகிறது. இக்கோயில் கும்பாபிஷேகத்தில் அனைத்து மக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும், அவரவர் வசதிக்கேற்ப நிதி பங்களித்து கும்பாபிஷேகம் விழா சிறப்படைய அனைவரும் ஒத்துழைக்க வழங்க வேண்டும் என திருப்பணி கமிட்டி தெரிவித்துள்ளது.

Related Stories: