×

திண்டுக்கல்லில் ேநதாஜிக்கு மரியாதை

திண்டுக்கல், ஜன. 24: திண்டுக்கல் காமராஜர் சிலை அருகே மாவட்ட காமராஜர் சிவாஜி தேசிய பேரவை சார்பில் நேற்று சுதந்திர போராட்ட வீரர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 124வது பிறந்ததினம், லாலா லஜபதிராயின் 156வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகிக்க, மாநகர தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். இளைஞர் பிரிவு தலைவர் சஞ்சய்குமார் வரவேற்றார். அரசியல் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் சுபாஷ் சந்திர போஸ், லாலா லஜபதிராய் ஆகியோரின் சுதந்திர போராட்டங்கள் குறித்து விளக்கினர். ஏற்பாடுகளை மாவட்ட நிறுவனர் வைரவேல் செய்திருந்தார். மாநகர துணை தலைவர் பத்மநாபன் நன்றி கூறினார்.

Tags : Netaji ,Dindigul ,
× RELATED மதுரை நேதாஜி சாலையில் உள்துறை...