×

விவசாயிகள் கவலை குழந்தை இல்லையென கணவர் அடித்து உதைத்ததால் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

ஒரத்தநாடு, ஜன. 24: ஒரத்தநாடு தாலுகா வடக்கூர் தெற்கு கிராமம் கருப்பட்டி பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் வெற்றிச்செல்விக்கும், அம்மாபேட்டை அருகே உள்ள செண்பகபுரம் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் புண்ணியமூர்த்தி மனஉளைச்சலில் இருந்தார். இதனால் வெற்றிச்செல்வியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் வெற்றிச்செல்வி மாயமானார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புண்ணியமூர்த்தி புகார் செய்தார். அதில் தனது மகள் வெற்றிச்செல்வியை அவரது கணவர் அடித்து துன்புறுத்தியதால் மாயமாகி விட்டார் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிந்து வெற்றிச்செல்வியை தேடி வருகின்றனர்.

கொண்டு அறுவடை செய்யப்பட்டது. அப்போது கடுமையான வறட்சி காரணமாக பெரும்பாலான விவசாய தொழிலாளர்கள் கேரளா, ஆந்திரா, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை சென்றுவிட்டனர். இதனால் சில ஆண்டுகளாக இயந்திரங்கள் மூலம் அறுவடை பணி நடந்து வருகிறது.
தற்போது சம்பா, தாளடி நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில் இயந்திரங்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்துள்ள நிலையில் அவைகள் முளைப்பதற்கு முன் அறுவடை செய்யாவிட்டால் அனைத்தும் நாசமாகி விடும்.

கடந்தாண்டுகளில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.2,000 வரை அறுவடை இயந்திரத்துக்கு வாடகையாக வசூலித்தனர். ஆனால் டீசல் உயர்வு, இயந்திரத்தின் உதிரிபாகங்கள் உயர்வு, டிரைவர்களின் கூலி உயர்வால் அறுவடை இயந்திரங்களை தஞ்சை மாவட்டத்துக்கு உரிமையாளர்கள் கொண்டு வரவில்லை.
ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்தும் நெற்பயிர்களை அறுவடை செய்யாமல்உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம், வேளாண்மைத்துறை பொறியாளர் துறை மூலம் அறுவடை இயந்திரத்தை தேவைக்கேற்ற வகையில் கொண்டு வந்து சம்பா, தாளடி நெற்பயிர்களை அறுவடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நெற்பயிர்களின் நிலை கேள்வி குறியாகும் என்றார்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா