×

தஞ்சையில் இருந்து தூத்துக்குடிக்கு மணல் கடத்திய லாரி பறிமுதல்

தஞ்சை, ஜன. 24: தஞ்சையில் இருந்து தூத்துக்குடிக்கு மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் தஞ்சை மாவட்ட எல்லையில் உள்ள அற்புதாபுரம் சோதனைச்சாவடியில் வல்லம் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது தஞ்சையில் இருந்து வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதையடுத்து லாரியில் மணல் இருப்பதை பார்த்து டிரைவரிடம் பர்மிட் இருக்கிறதா என கேட்டனர். அப்போது டிரைவர் லாரியில் இருந்து குதித்து தப்பியோடி விட்டார். இதையடுத்து லாரியில் இருந்த அனிஸ் (26) என்பவரை கைது செய்தனர்.

கும்பகோணம்:  கும்பகோணம் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொரநாட்டு கருப்பூர் பகுதியில் வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுபோல் பழைய பேட்டை ரவுண்டானா அருகே வாகன தணிக்கை நடத்தியபோது மணல் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவரான மயிலாடுதுறை பிருத்விராஜை (21) கைது செய்தனர்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...