சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சை, ஜன. 24: தஞ்சையில் சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. ரயில் நிலையத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கோவிந்தராவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி ஆத்துப்பாலம், அண்ணா சிலை, கீழராஜவீதி வழியாக அரண்மனை வளாகத்தை அடைந்தது.

பேரணியில் சாராயத்திற்கு எதிராகவும், சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிய பதாகைகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏந்தி சென்றனர். பேரணியை துவக்கி வைப்பதற்கு முன் கலெக்டர் கோவிந்தராவ் பேசும்போது, சாராயத்தால் பசியின்மை, உடல்நல குறைவு, நினைவாற்றல் குறைவு, நரம்பு தளர்ச்சி, கண் பார்வை குறைவு, கல்லீரல் பாதிப்பு, மூளை செயலிழப்பு, வாகன விபத்து ஏற்படும் என்றார்.

Related Stories: