×

சம்பா, தாளடி நெற்பயிருடன் உளுந்து, பயறு வகைகளை ஊடு பயிராக தெளிக்கலாம்

நாகை, ஜன.24: நாகை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற்பயிருடன் ஊடு பயிராக உளுந்து அல்லது பயறு வகைகளை தெளித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் பிரவீன்பிநாயர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா, தாளடி 1 லட்சத்து 32 ஆயிரத்து 57 எக்டேரில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது பயிர் கண்ணாடி இலை பருவம் முதல் அறுவடை நிலை வரை பயிர் உள்ளது. வரும் 31ம் தேதிக்குள் 50 சதவீதமும், பிப்ரவரி மாதத்தில் 40 சதவீதமும், மார்ச் முதல் வாரத்தில் 10 சதவீதமும் அறுவடை முடியும் நிலையிலும் சம்பா தாளடி பயிர்கள் உள்ளது.

பயிரிடப்பட்ட அனைத்து பரப்பளவிற்கும் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளார்கள் என்பது வரவேற்கத்தக்கது. கடந்த 18ம் தேதி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ததில் பயிர் ஆங்காங்கே சாய்ந்து காணப்படுகிறது. சில இடங்களில் நீர் வடியாமல் இருப்பதை உடனடியாக வடித்து மகசூல் இழப்பு இல்லாமல் அறுவடை மேற்கொள்ள வேண்டும். மேலும், அறுவடை தருணத்தில் இருக்கின்ற வயல்களில் ஊடுபயிராக உளுந்து, பயிர் தெளித்து சாகுபடி மேற்கொள்ளலாம். இதற்கான விதை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்து மானியம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று மாவட்ட கலெக்டர் பிரவின் பி நாயர் தெரிவித்துள்ளார்.

Tags : Samba ,
× RELATED சம்பா, தாளடி பருவத்தில் 2,53,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்